டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் மோதும் போட்டி குறித்து கணிப்புகள்..!!

ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அடுத்து பலபரிச்சை மேற்கொள்ள நிலையில், இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை பற்றி காண்போம்.
இந்தியாவின் முன்னணி தொடராக ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் அனைத்திற்கும் முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில், தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.இந்த வரிசையில் அடுத்து டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.
போட்டி குறித்த விவரம் :
7 வது லீக் போட்டி : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & செவ்வாய்க்கிழமை
தேதி : 4 ஏப்ரல் 2023
மைதானம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 ஆம் தொடரை டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியுடன் ஆரம்பித்துள்ளது, எனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணியின் ஹோம் கிரௌண்டில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.
அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிரட்டல் அணியாக ஐபிஎல் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த வெற்றியை தொடர முழுவீச்சில் முயற்சிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் அடுத்த அதிரடி போட்டியாக இந்த போட்டி அமையும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் டெல்லி அணியின் ஹோம் கிரௌண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் அறிக்கை :
டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தின் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இந்த பிட்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 170 ரன்கள் பதிவு செய்தால் போட்டியின் வெல்ல வாய்ப்புள்ளது என்று தரவுகள் மூலம் அறிய முடிகிறது, மேலும் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ஷுப்மான் கில்
துணை கேப்டன் : ரஷித் கான்
பேட்ஸ்மேன்கள் : ஷுப்மான் கில் (கேப்டன் ), டேவிட் வார்னர், ரிலீ ரோசோ வ்.
ஆல்ரவுண்டர்கள் :ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் (து.கேப்டன்), ராகுல் டெவாடியா
விக்கெட் கீப்பர் : சர்பராஸ் கான், விருத்திமான் சாஹா
பவுலர்கள் : கலீல் அகமது, முகமது ஷமி, அல்சாரி ஜோசப்.
டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோ வ், சர்ஃபராஸ் கான் (வி.கீ), ரோவ்மேன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா (வி.கீ), ஷுப்மான் கில், ஒடியன் ஸ்மித்/மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்.