டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அசத்தல் பிளேயிங் லெவன்..!! | dc playing 11 for ipl 2023

இந்திய மண்ணின் முக்கிய தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் இளம் வீரர்கள் படையை கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிரட்டல் பிளேயிங் லெவனுடன் களமிறங்கி அணிக்கான முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்க உள்ளது, டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ரிஷாப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ள முன்னணி வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக டெல்லி அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது சற்று நம்பிக்கை தரும் பலமாக அமைத்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் நல்ல பார்மில் இருக்கும் இளம் வீரர் பிரிதிவ் ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்குவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் முன்னணி மிட்செல் மார்ஷ் தனது மிரட்டல் பார்மில் உள்ளார். டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு பந்த் இல்லாத நிலையில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
டெல்லி அணியின் ஆல்ரவுண்டர்கள் இடத்தில் லலித் யாதவ் மற்றும் அற்புதமான பார்மில் இருக்கும் அணியின் துணை கேப்டன் அக்சார் பட்டேல் வலு சேர்க்கிறார்கள், மேலும் பவுலர்கள் இடத்தில் குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா மற்றும் கலீல் அகமது இடம் பெற அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியோடு பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், பில் சால்ட் (வி.கீ), சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கலீல் அகமது.