ஐ.பி.எல் 2023: டெல்லி அணியால் அதிகவிலைக்கு வாங்கப்பட்ட இந்திய பௌலர் முகேஷ் குமார் ..! அப்படி என்ன ஸ்பெஷல் அவர் .??

ஐ.பி.எல் மினி ஏலத்தில் பங்கேற்ற பல அணிகள் ஆல்ரவுண்டர்களை வாங்க போட்டிபோட்டனர், ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அதிகபட்சமாக 5.5 கோடிக்கு இந்திய பௌலர் முகேஷ் குமாரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டெல்லி அணி கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்ததால் அணியில் பெரிய அளவில் மாற்றங்களை செய்யாமல் சில வீரர்களை மட்டும் விடுவித்து முன்னனி வீரர்கள் அனைவரையும் தக்க வைத்தது.
இதனை அடுத்து ஏலத்தில் வெறும் குறிப்பிட்ட வீரர்களை குறிவைத்து வாங்க முற்பட்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி மொத்தமாக 5-வீரர்களையே வாங்கியது அதிலும் 20 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட இந்திய பௌலர் முகேஷ் குமாரை போட்டிபோட்டு அதிகப்படியான விலையில் 5.5 கோடிக்கு வாங்கியது.
முகேஷ் குமார் 29-வயது மிக்க வேகப்பந்து வீச்சாளார,இந்தியவின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருபவர்.இவர் தான் விளையாடிய 30 முதல்தர போட்டிகளில் 109 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
மேலும் 18 லிஸ்ட் ஏ போட்டிகளில் 17 விக்கெட்களையும், 17 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் குமாரை பல கோடிகள் கொடுத்து வாங்கியதற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாக தலைவர்களில் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்,அதில் முகேஷ் டெல்லி அணியில் நெட் பௌளராக இருந்தவர் .
முகேஷ் குமாரின் பௌலிங்கை பார்த்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவரை கண்டிப்பாக ஏலத்தில் வாங்க வேண்டும் என்று கூறினார்.அவரின் திறமையின் அடிப்படையிலேயே அதிக விலைக்கு போட்டிபோட்டு எடுத்தோம் என்று டெல்லி அணியின் நிர்வாக உறுப்பினர் கூறினார்.
டெல்லி அணியில் ஏற்கனவே பல முன்னனி வேகப்பந்து பௌலர்கள் உள்ள நிலையில் முகேஷ் குமார் கூடுதல் பலமாக இருப்பார் என்று தெரிய வருகிறது,மேலும் சேத்தன் சகார்யா,நோர்க்கியா,கலீல் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற வீரர்கள் அணியில் முக்கிய இடத்தை பெற்றுள்ள நிலையில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.