WPL 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேபிட்டல்ஸ்..!! மும்பை அணி கனவு தகர்ந்தது..!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பல அதிரடி வெற்றிகளை பெற்ற நிலையிலும் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி வெற்றிகளை பெற்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மாறி இடம் பெற்று வந்தார்கள். அதாவது லீக் சுற்று போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பதால் அணிகளுக்கு நடுவில் போட்டிகள் கடுமையாக இருந்தது.
இந்த தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி அசத்தல் வெற்றிகளை பெற்று தொடரில் முன்னிலையில் பெற்றது. இறுதியாக நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் இருந்தது, ரன் ரேட் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்ற நிலையில்,லீக் போட்டிகள் முடிவில் மூன்று அணிகள் முறையே டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் தகுதி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளார். இந்த பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதும், அதில் வெற்றி பெறும் அணி தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியை தொடர் முழுவதும் சிறப்பான வழிநடத்தி வந்த கேப்டன் மெக் லானிங் யாரும் எதிர்பாராத விதத்தில் முதல் முறை நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தேர்வாக வைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.