WPL 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்..!! சூடுபிடிக்கும் இறுதி கட்டம்..!! | delhi capitals stunning win to top spot

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடந்த முக்கிய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்தது.மேலும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இரு அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மிரட்டல் அணியாக வெற்றிகளை குவித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியை தொடரின் 18 வது லீக் போட்டியில் சந்தித்த டெல்லி கேபிடல்ஸ் அணி மிரட்டல் பவுலிங் வெளிப்படுத்தி தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே திணறியது.மும்பை அணியின் முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 109 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்தது.டெல்லி அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வெறும் 9 ஓவர்களில் மும்பை அணியின் இலக்கை அடைந்து மிரட்டல் வெற்றியை பெற்றது, இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை அணியும் டெல்லி அணியும் சமநிலையில் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணியை பின்தள்ளி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்தை பெற்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், இன்னும் தொடரில் மீதம் 2 லீக் போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிக்கும் கடும் போட்டி நிலவும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் லீக் சுற்றின் இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து பிளே ஆப் சுற்றில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு எந்த அணி செல்லும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.