ஐபிஎல் 2023 : சி.எஸ்.கே அணியின் வீரர் தீபக் சாஹர் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் தீபக் சாஹர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த முறை ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்த உள்ளேன் என்று கூறி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் 14 கோடிக்கு வாங்கப்பட்ட முன்னணி வீரர் தீபக் சாஹர், போட்டியில் தொடக்கத்தில் தனது அற்புதமான ஸ்விங் பவுலிங் மூலம் சென்னை அணி பல வெற்றிகள் பெற காரணமாக விளங்கினார். இந்நிலையில் 2022 ஆம் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் 2023ஆம் ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி நிர்வாகத்தின் மூலம் அணியில் தக்க வைக்கப்பட்டார், இதனை அடுத்து அண்மையில் அளித்த பேட்டியில் தீபக் சாஹர் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமாகி விட்டேன் தொடரில் முழுமையாக பங்கேற்பேன் என்று கூறினார்.இதனை அறிந்த சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் தீபக் சாஹர் இந்த முறை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய பவுலிங்கை வெளிப்படுத்த உள்ளதாக கூறினார், அதாவது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பவுலிங் செய்ய உள்ளேன் என்றும் மேலும் இருபுறமும் பந்தை ஸ்விங் செய்ய உள்ளேன் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தீபக் சாஹர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட பயிற்சி எடுத்து வருவதால் பேட்ஸ்மேனாக வும் அசத்த உள்ளேன் என்று கூறினார்.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளதாக கூறினார். ஒரு பிளேயர் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பவுலிங் செய்து பேட்டிங்கும் செய்தால் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும், இந்திய அணியில் அதற்கு எடுத்துக்காட்டாக ஹர்டிக் பாண்டிய உள்ளார் என்று தீபக் சாஹர் கூறினார்.
இதன்மூலம் இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பக்கபலமாக தீபக் சாஹர் இருப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.