ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு விட்டேன் அணியில் விரைவில் இணைய உள்ளேன், இந்த முறை சென்னை அணிக்காக சிறப்பான வெளிப்படுத்த உள்ளேன் என்று கூறியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இந்தியாவின் முக்கிய டி20 தொடர் விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அணிகளும் முழுவீச்சில் தொடருக்கான தயாராகி வருகிறார்கள்.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் தீபக் சாஹர் காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க சென்னை அணியில் தீபக் சாஹர் தக்க வைக்க பட்ட நிலையில், தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபக் சாஹர் காயத்தால் அவதி பட்டு வந்த நிலையில் எந்தவித தொடரிலும் பங்கேற்காமல் முழுமையாக ஓய்வில் இருந்தார், இந்நிலையில் தற்போது அளித்த பேட்டியில் பேசிய தீபக் சாஹர் கூறியது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு விட்டேன் மூன்று மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என்று கூறினார், மேலும் இந்த ஆண்டு சென்னை அணிக்காக முழுவீச்சில் செயல்பட உள்ளேன் என்று கூறினார்.
தீபக் சாஹர் உடைய பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது, சென்னை அணியின் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை அணி சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.