பெங்களூரு அணியில் களமிறங்கினார் ஹசரங்க ..!! இளம் வேகப்பந்து பவுலருக்கு வாய்ப்பு..!! | debut player for rcb vs dc ipl 2023

ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியில் விளையாட பெங்களூர் அணியில் இடம் பெற்றார் அனுபவ வீரர் வனிந்து ஹசரங்க, மேலும் புதிய இளம் வேகப்பந்து பவுலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் தலைமையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, மிரட்டல் பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள முன்னணி அணியாக பெங்களூர் அணி விளங்குகிறது. அதே சமயத்தில் பவுலிங்கில் மிகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தடுமாறி உள்ளது.
இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிராக பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முன்னணி சுழல் பந்து பவுலர் வனிந்து ஹசரங்க ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார்.மேலும் இந்த போட்டியில் விளையாட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து பவுலர் விஜயகுமார் வைஷாக்கிற்கு வாய்ப்பளிக்க பட்டுள்ளது.
பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள 26 வயது இளம் வீரர் விஜயகுமார் வைஷாக் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பங்கேற்கிறார்.ஆனால் இந்தியாவின் உள்நாட்டு தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் குறிப்பாக 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை 6.31 எகானமி உடன் கைப்பற்றியுள்ளார்.மேலும் ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடக அணிக்காக சிறப்பாக செயல்ப்பட்ட வைஷாக் தனது அணி அரையிறுதி போட்டி வரை முன்னேற உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அனுபவ வீரர் ஹசரங்க மற்றும் விஜயகுமார் வைஷாக் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.