ஹைதராபாத் மற்றும் டெல்லி மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!!

ஐபிஎல் 2023 அரங்கில் இன்று நடைபெற உள்ள 34 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். ஹைதராபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியானது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் ஐடன் மார்க்ராம் தலைமையில் 6 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே போல் டெல்லி கேபிடல்ஸ் அணி பங்கேற்ற 6 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே போராடி பெற்றுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டிகள் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இரு அணிகளும் அடுத்து வரும் போட்டிகளில் கட்டாய வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் இடையில் வெற்றியை பெற கடுமையான போட்டி அரங்கேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் : அபிஷேக் சர்மா, ஹாரி புரூக், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்
டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன் : டேவிட் வார்னர் (கேப்டன் ), பிலிப் சால்ட் (வி.கீ), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, சர்பராஸ் கான், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், ரிபால் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா.