டெல்லி அசத்தல் வெற்றி...பெங்களூர் போராடி தோல்வி | RCB vs DC IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 50வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற RCB அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி தங்களுக்கு சாதகமாக விளையாட ஆரம்பித்தனர். டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களின் பௌலிங்கில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்து கொண்டனர். இருப்பினும் விராட் கோலி (55), ஃபாஃப் டு பிளெசிஸ் (45), தினேஷ் கார்த்திக் (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 181 ரன்கள் எடுத்தனர். இதில் ஆட்டத்தின் இறுதி வரையில் அவுட் ஆகாமல் மஹிபால் லோம்ரார் (54) சிறப்பாக விளையாடினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி அணியை அசால்டாக கவிழ்த்து விடலாம் என்று பெங்களூர் அணி நினைத்தனர். ஆனால் டெல்லி அணி வேற லெவெலில் விளையாடி சீக்கிரமாக ஆட்டத்தை நிறைவு செய்தனர். டேவிட் வார்னர் (22), பில் சால்ட் (87), மிட்செல் மார்ஷ் (26) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதி வரை rilee rossouw (35) மற்றும் அக்சர் படேல் (8) விளையாடினார்கள். எனவே, டெல்லி அணி 16.4 ஓவரில் 187/3 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் - விராட் கோலி, எஃப் டு பிளெஸ்ஸிஸ்(சி), கேஎம் ஜாதவ், எம்கே லோம்ரோர், ஜிஜே மேக்ஸ்வெல், டபிள்யூ ஹசரங்கா, தினேஷ் கார்த்திக்(வாரம்), அனுஜ் ராவத், முகமது சிராஜ், கேவி ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட்.
டெல்லி கேபிட்டல்ஸ் பிளேயிங் லெவன் - டேவிட் வார்னர்(சி), மணீஷ் பாண்டே, ஆர்ஆர் ரோசோவ், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், எம்ஆர் மார்ஷ், பிடி சால்ட்(வாரம்), கேகே அகமது, கேஎல் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.