டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன்.வெளியானது.!! | dc vs kkr 2023 toss update

ஐபிஎல் 2023 தொடரில் 28 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் விளையாட உள்ளார்கள். தற்போது இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்ய மிகவும் போராடி வருகிறது, இதுவரை பெரிய அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய டெல்லி அணியானது தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
அதே சமயத்தில் நிதிஷ் ராணா தலைமையில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பெரிய அளவில் ஜொலிக்க வில்லை என்றாலும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி அணியை விட நல்ல நிலையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தொடரில் தங்கள் நிலையை முன்னேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மழையால் மிகவும் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேபிட்டல்ஸ் பிளேயிங் லெவன் : டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட்(வி.கீ), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கீம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் : ஜேசன் ராய், லிட்டன் தாஸ்(வி,கீ), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), மந்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.