டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி குறித்த முழு அப்டேட்..!! | dc vs kkr 2023 ipl preview

இந்திய மண்ணில் சிறப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் 2023 தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 2 வெற்றிகளை பெற்று ஒரு அளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளது.
போட்டி குறித்த விவரம் :
28 வது லீக் போட்டி : டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & வியாழக்கிழமை
தேதி : 20 ஏப்ரல் 2023
மைதானம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெறும் டெல்லி அருண் ஜெட்லி மைதானம் அதிரடி பேட்டிங் வெளிப்படுத்த உதவும் தன்மை கொண்டதாகும், குறிப்பாக இங்கு பவுண்டரிகள் மிக அருகில் இருக்கும் என்பதால் ரன்கள் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் சராசரி இலக்காக 170 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பதிவாக உள்ளது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது, நடப்பு ஐபிஎல் தொடர் ஆனது டெல்லி அணிக்கு மிகவும் மோசமாக தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிகளை பெற மிகவும் போராடி தான் வருகிறது.
இந்நிலையில் தொடரில் அடுத்த நிலைக்கு செல்ல இந்த போட்டியின் வெற்றியானது என்பது இரு அணிக்கும் மிகவும் முக்கியம் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கட்டாயம் முழுவீச்சில் செயல்படும், எனவே வெற்றி வாய்ப்பானது இரு அணிகளுக்கும் சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - வெங்கடேஷ் ஐயர்
துணை கேப்டன் - அக்சர் படேல்
விக்கெட் கீப்பர் -ரஹ்மானுல்லா குர்பாஸ்
பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங்.
ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், ஆண்ட்ரே ரஸ்ஸல்.
பந்துவீச்சாளர்கள் – குல்தீப் யாதவ், சுனில் நரைன், அன்ரிச் நார்ட்ஜே.
டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (வி.கீ), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரகுமான், கலில் அகமது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), என் ஜெகதீசன், வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி.