டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் அடுத்த மிரட்டல் ஆட்டமாக 7 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியானது.
இந்த போட்டியில் புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கிலும், ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜ்ராத் டைட்டன்ஸ் அணி தங்கள் வெற்றி பயணத்தை தொடரும் நோக்கிலும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை ட்வீட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ் , ரோவன் பவல் போன்ற அதிரடி வீரர்கள் கொண்ட பலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் முன்னணி வீரர்கள் ரன்கள் பெற தவறிய நிலையில் தோல்வியை தழுவியது, அதை சரி செய்து இந்த போட்டியில் அசத்தும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜ்ராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது, எனவே இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற முழு வீச்சில் செயல்படும் என்பதில் ஐயமில்லை.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன் : பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோஸ்ஸௌவ், சர்ஃபராஸ் கான், அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், ஜோஷ் லிட்டில், முகமது ஷமி, யாஷ் தயாள்.
இந்தப் போட்டியில், குஜராத் அணி டாஸை வெற்றி பெற்று, முதலில் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதன் படி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி எவ்வளவு டார்கெட் வைக்கப் போகிறார்கள் என்பதை காத்திருந்து பார்க்கலாம்.