குஜராத் டைட்டன்ஸ் அசத்தல் பவுலிங்…!! டெல்லி கேப்பிடல்ஸ் நிதான ஆட்டம்.!! | ipl dc vs gt live

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அதிரடி அரங்கேறியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி மிகவும் தடுமாறியது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் பிரிதிவ் ஷா சொற்ப ரன்களில் குஜராத் அணி பவுலர் முகமது ஷமி பவுலிங்கில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனை அடுத்து சற்று நிதானமாக விளையாடி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 37(32) மற்றும் இளம் வீரர் சர்பராஸ் கான் 30(34) அணியின் ஸ்கோரை சற்று ஏற்றி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் உடனுக்குடன் வேகமாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டெல்லி அணி நல்ல டார்கெட்டை செட் செய்யும் வகையில் பொறுப்புடன் விளையாடிய அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் 36(22) ரன்கள் பதிவு செய்தார்.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 162 ரன்கள் பதிவு செய்து, குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சிறந்த பவுலிங்கை முகமது ஷமி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி அணி அளித்த இலக்கை அடைந்து வெற்றி பயணத்தை தொடருமா என்று பொறுத்திருந்து காண்போம்.