டேவிட் வார்னரின் போராட்டத்தில் டெல்லி அணிக்கு முதல் வெற்றி..!! | dc first win in ipl 2023

ஐபிஎல் 2023 தொடரில் டேவிட் வார்னர் தலைமையில் விளையாடி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் இருந்த நிலைக்கு மிகவும் போராடி முடிவு கட்டியது, கடைசியாக டெல்லி அணிக்காக போராடி வந்த கேப்டன் டேவிட் வார்னர் உடைய போராட்டத்திற்கு பலம் கிடைக்கும் வகையில் முதல் வெற்றி கிடைத்துவிட்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மிகவும் திணறினார்கள். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் போராடி 10 விக்கெட்டையும் இழந்து 127 ரன்கள் பதிவு செய்தது.இதையடுத்து தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பில் களமிறங்கிய துவக்க வீரர் பிரிதிவ் ஷா மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதே சமயத்தில் வழக்கம் போல் பொறுப்புடன் விளையாடிய அணியின் கேப்டன் மற்றும் துவக்க வீரரான டேவிட் வார்னர் அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
அதன்பின் கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் டேவிட் வார்னர் 57(41) விக்கெட்டை முன்னணி பவுலர் வருண் சக்கரவர்த்தி கைப்பற்றினர். டெல்லி அணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் வகையில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் முன்னணி பவுலர் சக்கரவர்த்தி இருவரும் இணைந்து அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி இறுதி வரை போராடினார்கள்.
அதே போல் இறுதிவரை போராடிய டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து தனது புள்ளி கணக்கை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற போராடியது, ஆனால் இலக்கை குறைவானதாக இருந்ததால் டெல்லி அணி வெற்றியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.