இறுதி கட்டம் வரை சென்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மிரட்டல் வெற்றி.!! குஜராத் போராட்டம் வீண்..!! | dc first win against gt 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இறுதி வரை வெற்றி பெற இரு அணிகள் சார்பில் அசத்தல் ஆட்டம் வெளிப்பட்ட நிலையில், ஐபிஎல் அரங்கில் முதல் முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில், களமிரங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடிய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 130 ரன்கள் பதிவு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் பொறுப்புடன் விளையாடிய அமன் ஹக்கீம் கான் அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னணி வீரர்கள் விருத்திமான் சாஹா 0(6), ஷுப்மன் கில் 6(7) , விஜய் ஷங்கர் 6(9) மற்றும் டேவிட் மில்லர் 0(3) ஆகியோர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பவுலிங்கில் ஆட்டமிழந்து வேகமாக பெவிலியன் திரும்பினார்கள். டெல்லி அணியின் பவுலர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி குஜராத் அணிக்கு ரன்கள் பெற முடியாமல் நெருக்கடி அளித்தார்கள்.
குஜராத் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் நிதானமாக விளையாடி அரைசதம் பதிவு செய்து அணியின் நம்பிக்கையாக களத்தில் வந்தார். டெல்லி அணி சார்பில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பக்கம் இருந்த போட்டியின் வெற்றியை குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ராகுல் டெவாடியா ஹாட்ரிக் சிக்சர் அடித்து குஜராத் அணி பக்கம் திருப்பினார் என்று கூறினால் மிகையில்லை.இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில் டெல்லி அணி பவுலர் இஷாந்த் சர்மா டெவாடியா 20(7) விக்கெட்டை கைப்பற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் தலைமையில் ஆன டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 59*(53) இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அசத்தல் வெற்றியை பெற்று அரங்கை அதிர வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.