கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை துவம்சம் செய்த டெல்லி கேபிட்டல்ஸ்..!! | dc bowling vs kkr 2023

இன்று ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியை சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி என்று கூறினால் மிகையில்லை.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மழை காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கத்தில் இருந்து பெரிய சரிவை சந்தித்தது.
அதாவது டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலர்கள் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி கொல்கத்தா அணி வீரர்களை திணறடித்தார்கள். அனைத்து முன்னணி வீரர்களும் உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள் , அதே சமயத்தில் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் மட்டும் 43(39) ரன்கள் பதிவு செய்தார்.
டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 2 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் மற்றும் அன்ரிச் நர்கியா போன்ற மற்ற பவுலர்களும் தலா 2 விக்கெட்டுகளை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வரை கொல்கத்தா அணி சார்பில் போராடிய ஆண்ட்ரே ரசல் 38(31) ரன்கள் பெற்ற நிலையில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 127 ரன்கள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.