வார்னர் மற்றும் அக்சார் அதிரடியில் டெல்லி அசத்தல் ..!! இறுதியில் மிரட்டிய மும்பை அணி..!! | dc batting vs mi 2023

ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் 16 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் களத்தில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய மும்பை அணி டெல்லி அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தூணாக விளங்கும் கேப்டன் டேவிட் வார்னர் வழக்கம் போல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன்கள் குவித்தார், மற்றொரு முனையில் அணியின் முன்னணி வீரர்கள் உடனுக்குடன் மும்பை பவுலிங்கில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பின் களமிறங்கிய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 22 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து அசத்தினார். டெல்லி அணி நல்ல இலக்கை அடைய கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் படேல் உதவுவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் பெஹ்ரண்டோர்ஃப் இருவரும் உடனுக்குடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.
டெல்லி அணிக்காக தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 51(47) ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார்.இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் பதிவு செய்தது.டெல்லி அணி பேட்டிங்கை பார்த்து பெரிய அளவில் ரன்கள் பெரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மும்பை அணி இறுதியில் பவுலிங்கில் அசத்தி அனைத்து விக்கெட்களையும் பெற்றது.
மும்பை அணி சார்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய பியூஷ் சாவ்லா மற்றும் பெஹ்ரண்டோர்ஃப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணி அளித்த இலக்கை அடைந்து வெற்றியை பெறுமா..?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.