IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலியா அணியில் தொடரும் சோகம்..!! காயத்தால் மேலும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!!
![IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலியா அணியில் தொடரும் சோகம்..!! காயத்தால் மேலும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1780.jpg)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார், அந்த வரிசையில் மேலும் ஒரு முக்கிய வீரர் இணைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 வெற்றிகளை பெற்று 2-0 என்று முன்னிலையில் உள்ளது, ஆஸ்திரேலியா அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் முழு திறனையும் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் படுதோல்விக்கு காரணம் முன்னணி வீரர்கள் பலர் காயத்தினால் நாள் தொடரில் விளையாட முடியாத நிலையில் உள்ளது என்று பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி துவக்க வீரர் டேவிட் வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது முகமது சிராஜ் வீசிய பந்து வார்னரின் முழங்கை மீது அடித்தது பின்பு 2வது டெஸ்ட் போட்டியில் வார்னர் விலகி ஓய்வில் இருந்தார்.
அதை அடுத்து வெளியான ஸ்கேன் அறிக்கையில் வார்னருக்கு முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது எனவே தொடரில் மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து வார்னர் விலகி உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையடுத்து வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளார் அடுத்து மார்ச் 17 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மீதம் உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட முன்னணி வீரர்கள் பற்றாக்குறையால் தடுமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.