IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல் ..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.முதல் நாள் போட்டியில் பேட்டிங் செய்த பொழுது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தினால் அவர் விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது முகமது சிராஜ் பவுலிங் செய்த பந்து வார்னர் உடைய ஹெல்மட்டில் பட்டு சற்று வார்னர் நிலைதடுமாறினார்.அதன்பின் மருத்துவர்கள் அவரை சோதித்த பின் பேட்டிங் செய்த டேவிட் வார்னர் 15(44) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் முதல் நாள் போட்டி முடிந்த பிறகு வார்னர் பேட்டிங் செய்த போது ஏற்பட்ட பாதிப்பின் தாக்கத்தின் காரணமாக வார்னர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அணி தெரிவித்துள்ளது, மேலும் வார்னருக்குப் பதில் இடது கை பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா போட்டியில் தொடருவார் என்று அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, தற்போதைய நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் பதிவு செய்து விளையாடி வருகிறது, மேலும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி 14*(31) ரன்களுடனும் ஆல்ரவுண்டர் ஜடேஜா 14*(35) ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.