சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு.. பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் அறிவிப்பு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: January 13, 2023 & 13:33 [IST]

Share

டேவிட் வார்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த முக்கிய குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி 2024 ஆம் ஆண்டில் ஓய்வு பெற உள்ளார்.

இடது கை ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளார். 

மேலும் அவரது ஆக்ரோஷமான பேட்டிங்கால் பல போட்டிகளில் வென்றுள்ளார். ஆனால் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை பட்டத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள உள்ளார்.

இருப்பினும், அனுபவ வீரர் டேவிட் வார்னர், தேர்வு தனது கையில் இல்லை என்று ஒப்புக்கொண்டார். ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வது தனது நோக்கம் என்றும், 2023-24 அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி சீசனாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

அவர் தற்போது சிட்னி தண்டர்ஸ் அணிக்காக பிபிஎல் 12ல் விளையாடி வருகிறார், மேலும் அடுத்த சீசனிலும் டி20 லீக்கில் கிளப்பிற்காக விளையாடுவார்.

இதற்கிடையில், ஸ்டீவ் ஸ்மித் தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், தனது டி20 எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள ஸ்மித் மற்றும் வார்னர் அடுத்ததாக இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.