ஐபிஎல் 2023 : டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!! | delhi capitals 2023 new captain

ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் செயல்படுவார், டெல்லி அணியின் நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களின் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் காயம் அடைந்த நிலையில் ஓய்வில் உள்ளார் ,மேலும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி அணியை அனுபவ வீரர் டேவிட் வார்னர் வழிநடத்துவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என்று அணி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய டேவிட் வார்னர், ரிஷாப் பந்த் எங்கள் அணியின் சிறந்த அதிரடியான கேப்டன் இந்த முறை பந்த் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது எங்கள் அணிக்கு பெரிய இழப்பு என்று கூறினார். மேலும் என் மீது நம்பிக்கை வைத்து அணியின் கேப்டனாக நியமித்த அணி நிர்வாகத்திற்கு நன்றி சிறந்த வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்த மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.
ஐபிஎல் தொடரில் இதற்கு முன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்ட போது, அந்த அணிக்கு 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. அதன்பின் 2021 ஆம் ஆண்டு டெல்லி அணியில் இடம்பெற்ற டேவிட் வார்னர் சிறப்பாக செயல்பட்ட வருகிறார், மேலும் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய வார்னர் 5 அரைசதங்கள் உட்பட 432 ரன்கள் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.