ஐ.பி.எல் 2023: சி.எஸ்.கே அணியின் இளம் வீரர் அசத்தல்.! ரஞ்சி கோப்பையில் இரண்டு சதங்களை விளாசினார்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 29, 2022 & 11:30 [IST]

Share

ஐ.பி.எல் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி ஆல்ரவுண்டர் உட்பட பல இளம் வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தியது,எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர் படையை அமைப்பதாக தெரிய வருகிறது.

இதுவரை நடந்த தொடர்களில் சி.எஸ்.கே அணியில் அதிக வயதுடைய வீரர்களே  முழுமையாக இடம் பெற்றிருந்த நிலையில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது,அதனை மற்றும் வகையில் இந்த ஏலத்தில் அதிகமாக இளம் வீரர்களை வாங்கியுள்ளது.

சி.எஸ்.கே அணியில் தற்போதைய நிலையில் மொத்தமாக சில வீர்ர்களை மட்டுமே 30-வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.மேலும் தோனி,ராயுடு போன்ற அனுபவ வீரர்களுக்கு இது கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் முழுமையாக இளைஞர்களை கொண்ட அணியாக சி.எஸ்.கே  வருங்காலத்தில் காட்சியளிக்கும் என்பது உண்மை.

சென்னை அணியில் இடப்பெற்றுள்ள 18-வயது இளம் ஆல்ரவுண்டரான நிஷாந்த் சித்து அண்மையில் நடந்த ரஞ்சி கோப்பையில் ஹரியானா அணிக்காக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதங்களை அடித்து விளாசியுள்ளார்.

ஒடிசா அணிக்கு எதிராக 215 பந்துகளில் 142 ரன்களும்,பரோடா அணிக்கு எதிராக 110(100) ரன்களையும் அடித்தார்  மேலும் பௌலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்களை பெற்று அசத்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

நிஷாந்த் சித்து ஒரு இடது கை ஆல்ரவுண்டர் என்பதால் சி.எஸ்.கே அணியின் சிறந்த எதிர்கால ஆல்ரௌண்டராக வரும் அனைத்து வாய்ப்பும் உள்ளது,மேலும் இதே பார்மில் வரும் ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.   

இந்த ஏலத்தில் அண்டர்-19 அணியில் இடம்பெற்ற பகத் வர்மா,நிஷாந்த் சித்து, அஜய் ஜாதவ் மண்டல்,ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்களை வாங்கியதற்கான காரணம்,சி.எஸ்.கே அணியின் எதிர்கால தூண்களாக இவர்களை கட்டமைக்கும் நோக்கம் தான் என்பது தெளிவாக தெரிகிறது.