அசால்டாக விளையாடி வென்ற CSK அணி...MI படுதோல்வி! | MI vs CSK IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 49வது லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடிக்கிறது. எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற CSK அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை இண்டியன்ஸ் அணி.
மும்பை இண்டியன்ஸ் பிளேயிங் லெவன் - ரோஹித் சர்மா(கேப்டன்), டி ஸ்டப்ஸ், எஸ்ஏ யாதவ், டிம் டேவிட், சி கிரீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான், என் வதேரா, இஷான் கிஷான்(விகே), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆகாஷ் மண்ட்வால்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் - ஆர்டி கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, எம்எம் அலி, ஆர்ஏ ஜடேஜா, எஸ் துபே, எம்எஸ் தோனி(கேப்டன்), டிஎல் சாஹர், டியு தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, எம் தீக்ஷனா.
இந்த தொடரின் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த CSK அணி கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதில் ஒரு போட்டி மழை காரணமாக டை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாட ஆரம்பித்தனர். மும்பை இண்டியன்ஸ் அணியும் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் வெற்றிப் பெற்று தங்களை தக்க வைத்துக்கொண்டனர். அவர்களுக்கு இப்போட்டியின் வெற்றி மிக முக்கியமானது. பார்க்கலாம் யார் இறுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்று.
மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்:
போட்டியின் முதல் இன்னிங்ஸ் தொடங்கியதில் இருந்து மும்பை இண்டியன்ஸ் அணிக்கு சாதகமாக இல்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேமரன் க்ரீன் (6), இஷான் கிஷன் (7) மற்றும் ரோஹித் சர்மா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக காணப்பட்டது. ஆனால் நெஹால் வதேரா வெறித்தனமாக விளையாடி ஆட்டத்தின் நிலையில் மாற்றி விட்டார். இருப்பினும் 17வது ஓவரில் நெஹால் வதேரா (64) ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர்(2), துஷார் தேஷ்பாண்டே (2) மற்றும் மதீஷா பத்திரான (3) விக்கெட்டுகள் எடுத்து மும்பை அணிக்கு தண்ணி காண்பித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்:
CSK தங்கள் இலக்கை தெரிந்து கொண்டு சீக்கிரமாக ஆட்டத்தை நிறைவு செய்ய முடிவெடுத்து விட்டனர். இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் இருந்தே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட், டெவோன் கான்வே இருவரும் பட்டைய கிளப்பினார்கள். ஆனால் ஓவர் கடந்து செல்ல ருதுராஜ் கெய்க்வாட் (30), அஜிங்கியா ரஹானே (21) மற்றும் அம்பதி ராயுடு (12) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் இதனால் CSK அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இறுதியில் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில் 16வது ஓவரில் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து சிவம் துபே (26) மற்றும் தோனி (2) சேர்ந்து ஆட்டத்தை நிறைவு செய்தனர். CSK அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.