சேப்பாக்கத்தில் டெவோன் கான்வே அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி…!! | csk win vs srh 2023

ஐபிஎல் 2023 அரங்கில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து சேப்பாக்கத்தில் நாங்க தான் கில்லி என்று மீண்டும் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அசத்தல் வெற்றி பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்தார்கள்.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலர்கள் சிதறடித்தார்கள், குறிப்பாக சென்னை அணியின் அசத்தல் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3 விக்கெட்கள் பெற்றார்.இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் போராடி 134 ரன்கள் பதிவு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹைதெராபாத் அணி பவுலர்களை துவம்சம் செய்தார்கள், குறிப்பாக பவர் பிளே முடிவில் 60 ரன்கள் பதிவு செய்தனர்.
சென்னை அணி சார்பில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே அரைசதம் பதிவு செய்தார், ஹைதெராபாத் அணி பவுலர்கள் மிகவும் முயன்றும் சென்னை அணியின் துவக்க வீரர்கள் பார்ட்னெர்ஷிப்பை முறியடிக்க முடியவில்லை எனவே 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் பதிவு செய்வது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் சென்னை அணியின் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார், அடுத்து களமிறங்கிய சென்னை வீரர்கள் ரஹானே மற்றும் ராயுடு வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இந்நிலையில் சென்னை அணி சார்பில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 77*(57) ரன்கள் பதிவு செய்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவரில் ஹைதெராபாத் அணி அளித்த இலக்கை அடைந்து வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.