பரபரப்பான போட்டியில் பெங்களூரு அணியை சிதறடித்து சென்னை அணி அசத்தல் வெற்றி..!! | csk win against rcb 2023 match

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறியது, குறிப்பாக இரு அணிகள் சார்பில் சிக்ஸர் மழை பொழிந்தது என்று கூறினால் மிகையில்லை. அதன்பின் இறுதியில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் வெற்றியை பதிவு செய்து அரங்கை அதிர வைத்ததார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கத்தை அதிர வைத்தார்கள், குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர்கள் டெவோன் கான்வே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 83(45) ரன்கள் பெற்றார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் பதிவு செய்தது.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முன்னணி வீரர் விராட் கோலி 6(4) ரன்களில் இளம் பவுலர் ஆகாஷ் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பெங்களூரு அணி சார்பில் களமிறங்கிய அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்கள் பறக்க விட்டு சென்னை பவுலர்களை துவம்சம் செய்தார்.
அதே போல் மறுமுனையில் பெங்களூர் அணி கேப்டன் பாப் டு பிளேஸிஸ் தனது பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை தொடங்கினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 76 ரன்கள் பெற்று அரங்கை அதிர வைத்த வேளையில் தீக்ஷனா பந்தில் தோனி இடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் டு பிளேஸிஸ் 62(33) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில் போட்டி சற்று சென்னையின் பக்கம் திரும்பியது.
பெங்களூர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தினேஷ் கார்த்திக் 28(14) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் இளம் பவுலர் மதீஷ பத்திரன சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.