சென்னை vs ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | csk vs srh 2023 toss update

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளார்கள், தற்போது இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி எதிரணிகளை சிதறடித்து வருகிறது, எனவே ஐபிஎல் தொடரில் சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
சென்னை அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடி வெற்றியை பதிவு செய்து மிரட்டல் பார்மில் உள்ளது. அதே சமயத்தில் ஹைதெராபாத் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் மும்பை அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி உள்ளது, மேலும் போட்டி சென்னை அணியின் ஹோம் கிரௌண்டில் நடைபெறுவதால் இந்த போட்டியில் வெற்றி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய ஐடென் மார்க்கரம் தலைமையில் ஆன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் :டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன் & வி.கீ ), துஷார் தேஷ்பாண்டே, மஹேஷ் தீக்ஷனா, மதிஷா பத்திரனா, ஆகாஷ் சிங்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.