சென்னை சூப்பர் கிங்ஸ் VS சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதும் போட்டிக்கான கணிப்புகளுடன் அடங்கிய அப்டேட்..!! | csk vs srh 2023 prediction

ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த அதிரடி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் கணிப்பு, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றிகளை பெற்று முன்னணியில் உள்ளது. அதே சமயத்தில் கேப்டன் ஐடன் மார்க்ராம் தலைமையில் ஆன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது.
போட்டி குறித்த விவரம் :
29 வது லீக் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நேரம் & நாள் : 7:30 p.m & வெள்ளிக்கிழமை
தேதி : 21 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள சேப்பாக்கம் மைதானம் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வேகமாக ரன்கள் பெற உதவும் என்று தெரிய வந்துள்ளது.அதே போல் இந்த பிட்சில் ஸ்பின்னர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இங்கு டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்தால் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - டெவோன் கான்வே
துணை கேப்டன் - ஐடன் மார்க்ராம்
விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென்
பேட்ஸ்மேன்கள் – அஜிங்க்யா ரஹானே, ராகுல் திரிபாதி, ஹார்ரி புரூக்
ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி
பந்துவீச்சாளர்கள் - மயங்க் மார்கண்டே, மகேஷ் தீக்ஷனா, மார்கோ ஜான்சன்.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, அசத்தல் வெற்றிகளை பெற்று தொடரில் மிரட்டல் அணியாக உள்ளது.அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது பங்கேற்க 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது .இந்த போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதான மானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் என்பதால் வெற்றி வாய்ப்பு சென்னைக்கு தான் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, மொயின் அலி, சிவம் துபே, எம் எஸ் தோனி(வி.கீ), ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷ பத்திரன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம்(கேப்டன் ), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார்,டி நடராஜன், மயங்க மார்கண்டே.