சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் பலப்பரீட்சை…!! டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட் ..!! | csk vs rr ipl 2023 toss

ஐபிஎல் அரங்கில் இன்றைய போட்டியில் தொடரின் முன்னணி அணிகளாக விளங்கும் எம் எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் சேப்பாக்கத்தில் மோத உள்ளார்கள்.இந்த மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வருகிறது, குறிப்பாக அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சேப்பாக்கத்தில் பல ஆண்டுகள் கழித்து களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள போட்டியும் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதால் சிஎஸ்கே கட்டாயம் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் அரங்கில் ஒரு மிரட்டலான அணியாக வலம் வருகிறது, குறிப்பாக சிறந்த பேட்டிங் மற்றும் பவுலிங் அட்டாக் கொண்ட அணியாக உள்ளது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த மிரட்டலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் ), சிசண்டா மகலா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்/வி.கீ), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.