சென்னை மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டி குறித்த முக்கிய அப்டேட்..!! | csk vs rr ipl 2023 prediction

இந்திய மண்ணில் மிரட்டலாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் கணிப்பு, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் அரங்கில் முன்னணி மிரட்டல் அணிகளாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது, எனவே சிறந்த பார்மில் இருக்கும் சென்னை அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை அதிரடி வீரர்களை கொண்ட மிரட்டல் அணியாக வலம் வருகிறது, குறிப்பாக கடைசியாக விளையாடிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை துவம்சம் செய்த ராஜஸ்தான் அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
17 வது லீக் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & புதன்கிழமை
தேதி : 12 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ருதுராஜ் கெய்க்வாட்
துணை கேப்டன் - ரவீந்திர ஜடேஜா
விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
பேட்ஸ்மேன்கள் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே.
ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ஜேசன் ஹோல்டர்.
பந்து வீச்சாளர்கள்: துஷார் தேஷ்பாண்டே, யூஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட்.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் சிறந்த பேட்டிங் வெளிப்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது, குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்த பிட்சில் 200 ரன்கள் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்பின் பவுலர்கள் நல்ல பவுலிங்கை வெளிப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இந்த போட்டியில் கட்டாயம் ஒரு அதிரடி ஆட்டம் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசியாக விளையாடிய போட்டிகளில் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் கடைசியாக விளையாடிய போட்டியில் அசத்தல் வெற்றியை பெற்று உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரு அணிகளும் தங்களின் வெற்றி பயணத்தை தொடர கட்டாயம் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் இந்த போட்டி சென்னை அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதால் வெற்றி வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, டுவைன் பிரிட்டோரியஸ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம் எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, சிசண்டா மகலா.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜோஸ் பட்லர்(வி.கீ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர், முருகன் அஷ்வின்.