போராடி வெற்றி பெற்ற பஞ்சாப்.. சென்னை அணி தோல்வியால் அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்..! | CSK vs PBKS IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் இன்றைய தினத்தின் பலப்பரிட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தற்போது டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் சரமாரியான ஆட்டத்தை ஆடினர். ருதுராஜ் 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாறு இந்த இருவரது பார்ட்னர்ஷிப் 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் சிவம் டுபே களமிறங்கினார்.
இதில், கான்வே 30 ஆவது பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். சிவம் டுபே 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அலி 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு, 20 ஓவரில் சென்னை அணி 200 ரன்கள் 4 விக்கெட்டுகளுடன், 201 ரன்களை பஞ்சாப் அணிக்கு டார்கெட் வைத்தது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் அணியில் சிக்கர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களமிறங்கினர்.
இதில், தவான் 15 பந்துகளுக்கு 28 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, ஆடிய ஆட்டத்தில் 24 பந்துகளில் 42 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார் சிங். மேலும், சாம் கரண் மற்றும் லிவிங்ஸ்டன் பார்ட்னர்ஷிப் இறங்கிய நிலையில் சரமாறியான ஆட்டத்தை அடித்து தள்ளியது. இறுதியில் 197 ரன்கள் இருந்த நிலையில் ஒரு பந்துக்கு 3 ரன்கள் எடுக்க இருந்தது பஞ்சாப் அணி. அதே போல, சிகண்டர் ரசாவின் அருமையான ஆட்டத்தால், கடைசி ஒரு பந்துக்கு 4 ரன்கள் அடித்து போராடி வெற்றியைத் தழுவியது பஞ்சாப் அணி.