சென்னையின் மாஸ் ஆட்டம்.. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பதிலடி என்னவாக இருக்கும்.? | CSK Vs PBKS IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் இன்றைய தினத்தின் பலப்பரிட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தற்போது டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் சரமாரியான ஆட்டத்தை ஆடினர். ருதுராஜ் 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாறு இந்த இருவரது பார்ட்னர்ஷிப் 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் சிவம் டுபே களமிறங்கினார்.
இதில், கான்வே 30 ஆவது பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். சிவம் டுபே 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அலி 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு, 20 ஓவரில் சென்னை அணி 200 ரன்கள் 4 விக்கெட்டுகளுடன், 201 ரன்களை பஞ்சாப் அணிக்கு டார்கெட் வைத்துள்ளது.