சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் ஒரு பார்வை ..!! | csk vs pbks 2023 ipl prediction
![சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் ஒரு பார்வை ..!! | csk vs pbks 2023 ipl prediction](https://www.sportspartans.com/assets/uploads/news-2206.jpg)
ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த முக்கிய போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு மற்றும் ட்ரீம் லெவன் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் நல்ல பார்மில் உள்ளது, குறிப்பாக 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. அதே போல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நல்ல நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டிகள் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
41 வது லீக் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 30 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ருதுராஜ் கெய்க்வாட்
துணை கேப்டன் - சாம் குர்ரன்
விக்கெட் கீப்பர் - ஜிதேஷ் சர்மா
பேட்ஸ்மேன்கள் - டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, லியாம் லிவிங்ஸ்டோன்.
ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே.
பந்துவீச்சாளர்கள் - துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா , அர்ஷ்தீப் சிங்.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்த வரை ஸ்பின்னர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.அதே சமயத்தில் பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த போட்டி மதிய நேரத்தில் நடைபெற உள்ளதால் பிட்ச் சற்று வறட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி கணிப்பு :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் கடைசியாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் போராடி தோல்வியை தழுவி உள்ளது. அதே போல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக விளையாடிய போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை போராடியும் தோல்வியை தான் தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னேற இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை, ஆனால் போட்டி சென்னை அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதால் வெற்றி வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகமாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன் / வி.கீ), மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : அதர்வா டைடே, ஷிகர் தவான்(கேப்டன்), சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா(வி.கீ), ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.