சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விக்கு முடிவு கட்டுமா ..?? மும்பை அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா .?? | csk vs mi chepauk epic clash preview 2023

ஐபிஎல் 2023 அரங்கில் அடுத்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியை காண தனி கூட்டம் உண்டு என்று கூறினால் மிகையில்லை.
தற்போதைய நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றிகளை பெற்று 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியானது கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை பெற்று இனி வரும் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடர்ச்சியாக கடந்த போட்டிகளில் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு தொடரில் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் மிகவும் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள போட்டியை காண கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் ,டெவோன் கான்வே , ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலரும் நல்ல பார்மில் உள்ளார்கள் .அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோரும் மிரட்டல் பார்மில் உள்ள நிலையில் ஒரு மிரட்டல் போட்டியை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முடிவு வருமா.?? அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி பயணம் தொடருமா ..?? என்பதை பொறுத்திருந்து காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோரயமான ) : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி( கேப்டன் /வி.கீ), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோரயமான ) : இஷான் கிஷன்(வி.கீ), ரோஹித் சர்மா (கேப்டன்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா, ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா, அர்ஷத் கான்.