சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்…!!
![சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்…!!](https://www.sportspartans.com/assets/uploads/news-2014.jpg)
ஐபிஎல் அரங்கில் அடுத்த அதிரடி போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ள 6 வது லீக் போட்டி அமைய உள்ளது. இந்த போட்டியில் ஐபிஎல் 2023 ஆம் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் வெற்றியுடன் ஆரம்பித்த கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியும் சரியான பவுலிங் வெளிப்படுத்தாத நிலையில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து இந்த போட்டியில் தவறுகளை சரி செய்து வெற்றி பெற முழுவீச்சில் செய்லபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்த வரை முதல் போட்டியில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்து, சென்னை அணியுடன் மோத களமிறங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது, எனவே மிகவும் சுவாரசியமான போட்டியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
ஐபிஎல் 2023 ஆம் தொடர் மிகவும் மிரட்டலாக ஆரம்பித்து சென்று கொண்டிருக்கிறது, அந்த வரிசையில் அடுத்த அதிரடியாக சென்னை மற்றும் லக்னோ அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளார்கள்.இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே எல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, எம் எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், ராஜ்யவர்தன் ஹங்கர் கேகர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் : கே எல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி/கே கவுதம், மார்க் வூட், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.