சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லீக் போட்டி குறித்த கணிப்புகள் ஒரு பார்வை.!! | csk vs lsg 2023 match preview

ஐபிஎல் 2023 ஆம் தொடர் ஆரம்பித்து மிகவும் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்த அதிரடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ள போட்டிக்கான பிளேயிங் லெவன், வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் கணிப்பு உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் தங்கள் முதல் போட்டியில் விளையாடிய பிறகு, தொடரில் அவர்களின் 2வது போட்டியில் களமிறங்க உள்ளார்கள்.ஐபிஎல் 2023 ஆம் தொடரில் அதிரடியாக போட்டிகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் நிலையில் எம்.எஸ்.தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
3 வது லீக் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & திங்கட்கிழமை
தேதி : 3 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா
பிட்ச் அறிக்கை :
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை பொறுத்தவரை சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது, குறிப்பாக ஸ்பின்னர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இந்த பிட்சில் சராசரி 155 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பதிவாகி உள்ளது, போட்டி நடைபெற பாதிக்கு மேல் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி கணிப்பு :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை முதல் லீக் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த போட்டியில் களமிறங்க ஹோம் கிரவுண்ட் ஆனா சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டை என்று கூறலாம், எனவே லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றியை நோக்கி முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 ஆம் தொடரை அதிரடி வெற்றியுடன் தொடங்கியது, எனவே இந்த வெற்றியை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தொடர முயல்வார்கள் என்று தெரிய வருகிறது.இந்நிலையில் இந்த போட்டிக்கான வெற்றி ஹோம் கிரௌண்டில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ருதுராஜ் கெய்க்வாட்
துணை கேப்டன் : கே எல் ராகுல்
விக்கெட் கீப்பர் : எம் எஸ் தோனி, நிக்கோலஸ் பூரன்.
பேட்ஸ்மேன் : ருதுராஜ் கெய்க்வாட் , கே எல் ராகுல்
ஆல்ரவுண்டர்கள் : மொயீன் அலி , மார்கஸ் ஸ்டானிஸ், பென் ஸ்டோக்ஸ்
பவுலர்கள் : அவேஷ் கான், மார்க் வூட், ராஜ்யவர்தன் ஹங்கர் கேகர், மார்க் வூட்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (வி.கீ), க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய், டேனியல் சாம்ஸ்.