மிரட்டலான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி..! கொல்கத்தாவின் கனவு பறிபோனதே..! | CSK vs KKR IPL 2023

இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள எடன் கார்டென்ஸில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது.
இதில் முதலில் களமிறங்கிய கான்வே மற்றும் ருத்துராஜ் பார்ட்னர்ஷிப் அதிரடியான ஆட்டத்தை ஆடினர். இதனைத் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் இவர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை ஆடி, 73 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் ஆடினர். அதன் பிறகு, சுயஷ் ஷர்மாவின் அதிரடி பௌலிங்கால், ருதுராஜ் 19-க்கு 35 என்ற கணக்கில் ஆட்டமிழந்தார்.
இவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே ஆட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து கான்வே 39 பந்துகளில் 56 ரன்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, சிவம் டுபே ஆட்டத்தைத் தொடர்ந்தார். சிவம் டுபே 18 பந்துகளில் 42 ரன்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ரஹானே தனது அதிரடி ஆட்டத்தால் 29 பந்துகளில் 71 ரன்களை அடித்தார். கடைசியாக தல தோனி களமிறங்கி 3 பந்துகளுக்கு 2 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து ஓவரில் 235 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்ற கணக்கில் கொல்கத்தா அணிக்கு 236 ரன்களை இலக்காக வைத்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி. ஆரம்பத்தில் சரிந்தது. அதாவது, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் ஜேஸன் ராய் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் படி, ஜேசன் ராய் 25 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின், ரிங்கு சிங் தனது மிரட்டல் ஆட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால், தொடர் 3 ஓவரில் 3 விக்கெட்டுகளுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது சென்னை அணி. இறுதியில் ஒரு பந்துக்கு 50 ரன்கள் இருந்தது. இந்த ஒரு பந்துக்கு ஒரு ரன் என கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவரில் 186 ரன்கள் பெற்றது. எனவே, சென்னை அணி தாறுமாறாக அசத்தலாக விளையாடி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.