கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த கணிப்புகள்.!! | kkr vs csk 2023 prediction
![கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த கணிப்புகள்.!! | kkr vs csk 2023 prediction](https://www.sportspartans.com/assets/uploads/news-2159.jpg)
ஐபிஎல் 2023 தொடரில் அடுத்து போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது, குறிப்பாக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வென்றுள்ள சிஎஸ்கே அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ..?? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் தொடர்ச்சியாக தோல்விகளை பெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது தொடர் தோல்விக்கு முடிவு கட்டுமா ..?? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
33 வது லீக் போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 23 ஏப்ரல் 2023
மைதானம் : ஈடன் கார்டன்ஸ் மைதானம் , கொல்கத்தா.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - டெவோன் கான்வே
துணை கேப்டன் - வெங்கடேஷ் ஐயர்
பேட்ஸ்மேன்கள் - நிதிஷ் ராணா, அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட்
ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஆண்ட்ரே ரஸ்ஸல், மொயீன் அலி.
பந்துவீச்சாளர்கள் - மதீஷா பத்திரனா, வருண் சக்கரவர்த்தி,துஷார் தேஷ்பாண்டே .
விக்கெட் கீப்பர் - எம் எஸ் தோனி
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதன்மூலம் இந்த போட்டி அதிக ரன்கள் பதிவாகும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிட்சில் ஸ்பின்னர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது , மேலும் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கணிப்பு :
இந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று , குறிப்பாக 2 தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜேசன் ராய், என் ஜெகதீசன் (வி.கீ ), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன் & வி.கீ), மகேஷ் தீக்ஷனா, மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.