ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் லீக் போட்டி குறித்த அப்டேட்..!! | gt vs csk 2023 preview

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியின் வெற்றி கணிப்புகள்,பிட்ச் அறிக்கை, பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உலக அளவில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 15 ஆண்டுகள் கடந்து உள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் 16 வது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.
ஐபிஎல் போட்டி விவரம் :
முதல் லீக் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & வெள்ளிக்கிழமை
தேதி : 31 மார்ச் 2023
மைதானம் : நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
பிட்ச் அறிக்கை :
ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள பிட்ச் சிறந்த பேட்டிங் செய்ய உதவும் என்று தெரிய வந்துள்ளது, மேலும் ஸ்பின்னர்கள் இந்த பிட்சில் நல்ல பவுலிங்கை வெளிப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்றுள்ள போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 170 ரன்கள் பதிவாகி உள்ளது, அதே சமயத்தில் போட்டியில் சேஸிங் செய்யும் அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கணிப்புகள் :
ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது, மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை அணி மோசமான தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றிகரமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது, மேலும் தொடரில் பங்கேற்ற முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய 2 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் முதல் லீக் போட்டிகளில் இரு அணிகளுக்கும் வெற்றிக்கான வாய்ப்பு சரிசமமான அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறுமா..?? அல்லது எம்.எஸ்.தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா..?? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11 (தோராயமான) : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா(வி.கீ), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், மேத்யூ வேட், ராகுல் டெவாடியா, ரஷித் கான், ஷிவம் மாவி, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் 11 (தோராயமான) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன் & வி.கீ), தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மதிஷா பத்திரனா.
: