சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி தோல்வி..!! குஜராத் டைட்டன்ஸ் அசத்தல்..!!| csk vs gt match 2023 highlights

உலக அளவில் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் அதிரடியாக தொடங்கியது, இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் முதல் லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி குஜராத் பவுலர்களை சிதறடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 178 ரன்கள் பதிவு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 92(50) ரன்கள் பதிவு செய்தார்.
இதனை அடுத்து பவுலிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், பிளேயர் அம்பதி ராயுடுவுக்கு பதில் ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் பிளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.குஜராத் டைட்டன்ஸ் அணி தொடக்க வீரர்கள் சாகா மற்றும் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
குஜராத் வீரர் விரிதிமான் சாஹா 25(16) ரன்கள் பதிவு செய்து இளம் சென்னை வீரர் ராஜ்யவர்தன் ஹங்கர் கேகர் இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார், அடுத்து குஜராத் அணியின் வீரர் கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்த போது காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு பதில் இம்பாக்ட் பிளேயராக குஜராத் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மீண்டும் சென்னை அணிக்காக ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர் சுதர்சன் விக்கெட்டை பெற்று தந்தார். குஜராத் அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 63(36) அரைசதம் கடந்து தனது விக்கெட் இழந்தார்.
இதனை அடுத்து குஜராத் அணி வெற்றிக்கு உதவும் வகையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 27(21) ஹங்கர்கேகர் இடம் ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய ராகுல் ராகுல் டெவாடியா மற்றும் ரஷித் கான் அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியின் போக்கை மாற்றி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்கள்.
சென்னை அணி சிறந்த பேட்டிங் வெளிப்படுத்தியும் பவுலிங்கில் சற்று சொதப்பியதால் தோல்வியை தழுவியது, அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 2023 ஆம் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.