சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கைல் ஜேமிசனுக்கு பதில் களமிறங்கும் புதிய வீரர்.!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விளையாட அணியில் இடம்பெற்ற நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் புதிய வீரரை தொடரில் விளையாடி அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், தொடருக்கு முன்னதாக முக்கிய பவுலர் சிசண்டா மகலா காயம் காரணமாக நான்கு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு பதில் புதிய வீரரை அணி நிர்வாகம் எப்போது ஒப்பந்தம் செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது சென்னை அணியில் நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் இடத்தில் விளையாட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வீரர் வேகப்பந்து பவுலர் சிசண்டா மகலா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று அணி நிர்வாகம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. சிசண்டா மகலா தென்னாபிரிக்கா அணிக்கு ஒரு சில டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், உள்நாட்டு டி20 தொடர்களில் சிறந்த பவுலராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா மண்ணில் அண்மையில் நடந்து முடிந்த எஸ்.ஏ 20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய சிசண்டா மகலா 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கைல் ஜேமிசன் 1 கோடி ரூபாவிற்கு ஒப்பந்தம் ஆன நிலையில், தற்போது அவருக்கு பதில் சிசண்டா மகலா தனது அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு சென்னை அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023 ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 31 ஆம் கடந்த ஆண்டு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.