ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசத்தல் வெற்றி தருணங்கள்..!! | csk winning moments in ipl history

ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி சாதனை படைத்துள்ளது,மேலும் 4 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அசத்தல் வெற்றி தருணங்கள் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் அசத்தல் வெற்றிகளை பெறுவதில் பேர் போன முதன்மை அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்குகிறது என்று கூறினால் மிகையில்லை, மேலும் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
ஆல்பி மோர்கெல் மற்றும் பிராவோ சரவெடி ஆட்டம் :
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் களில் முக்கிய ஒருவராக ஆல்பி மோர்கெல் என்றும் இடம் பெற்றுள்ளார். அதற்கு முக்கிய காரணம் ஆல்பி மோர்கெல் உடைய அதிரடியான ஆட்டம் தான் என்று கூறினால் மிகையில்லை. ஐபிஎல் 2012 ஆம் ஆண்டு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ஆல்பி மோர்கெல் சிறப்பான சம்பவத்தை செய்தார்.
பெங்களூரு அணி சார்பில் 19 வது ஓவரை வீச கேப்டன் டேனியல் வெட்டோரி துணிச்சலுடன் ஒரு முடிவெடுத்து விராட் கோலியை பவுலிங் செய்ய வைத்தார். அந்த ஓவரில் சிக்ஸர்கள் பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டிய ஆல்பி மோர்கெல் 28 ரன்கள் பெற்றார். இதன் மூலம் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மற்றொரு ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பவுலர் வினய் குமார் வீசிய பந்துகளை சிதறடித்து வெற்றியை பெற்று தந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத போட்டியாக, இந்த போட்டி இன்றைய தேதியிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியின் முதல் ஐபிஎல் டைட்டில் சம்பவம் :
ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தரமான சம்பவத்தின் மூலம் தான் பெற்றுள்ளது. அதாவது ஐபிஎல் 2010 ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், குறிப்பாக சென்னை அணியின் வெற்றிக்கு தடை போடும் வகையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரன் பொல்லார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார், அப்போது சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சிறப்பாக செயல்பட்டு பக்காவான பீல்டிங் செட்டப் செய்து பொல்லார்ட் உடைய ஆட்டத்திற்கு முடிவு கட்டினார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அப்போது ஆரம்பித்த சென்னை அணியின் வெற்றி பயணம் இன்று வரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ல் திரும்பி வந்து செய்த தரமான சம்பவம் :
ஐபிஎல் தொடரில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் பங்கேற்க தடை விதிக்க பெற்றிருந்தது, இந்நிலையில் 2018 ஆம் மீண்டும் ஐபிஎல் தொடரில் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு பலபரிச்சை மேற்கொண்டது. இந்த போட்டியில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த சென்னை அணியை தனது அதிரடி பேட்டிங் மூலம் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்த போட்டியில் மும்பை அணி அளித்த 166 ரன்கள் இலக்கை அடைய மிகவும் சென்னை அணி திணறியது, குறிப்பாக 12 ஓவர்களில் 75 ரன்கள் பதிவு செய்து 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கி அணியின் காப்பானாக செயல்பட்ட டுவைன் பிராவோ மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 68(30)ரன்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார், அப்போது காயம் ஏற்பட்டு பெவிலியன் திரும்பிய சென்னை அணி வீரர் கேதார் ஜாதவ் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
ஐபிஎல் 2018 ஆம் ஆண்டு முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பெற்ற வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய ஒன்றாக இருந்தது, இந்த வெற்றி அப்படியே தொடர் முழுவதும் தொடர்ந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.