சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் பவுலிங்..!! லக்னோ அணிக்காக போராடிய ஆயுஷ் படோனி..!!

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினார்கள். இதில் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்னோ அணியின் அதிரடிக்கு முடிவு கட்டினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னணி வீரர்கள் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் பவுலிங்கில் தடுமாறி உடனுக்குடன் ஆட்டமிழந்தனர்.
லக்னோ அணி மிரட்டல் துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 14(17) உடைய விக்கெட்டை மொயீன் அலி கைப்பற்றி வேகமாக பெவிலியன் திரும்பினார்.அதன்பின் களத்தில் இருந்த லக்னோ அணி வீரர்கள் மனன் வோஹ்ரா 10(11) மற்றும் க்ருனால் பாண்டியா 0(1) உடைய விக்கெட்களை சென்னை அணியின் ஸ்பின்னர் மஹீஷ் தீக்ஷனா கைப்பற்றி அசத்தினார்.இந்நிலையில் பவர் பிளே முடிவில் வெறும் 31 ரன்கள் பெற்று லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்பின்னர்கள் அனைவரும் அசத்தி வந்த நிலையில், அணியின் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு லக்னோ அணியின் மிரட்டல் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 6(4) உடைய விக்கெட்டை கைப்பற்றினார்.அதன்பின் லக்னோ அணியின் கடைசி நம்பிக்கையாக நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் படோனி நிதானமாக பொறுப்புடன் விளையாடி வந்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் படோனி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் பதிவு செய்து அணி நல்ல இலக்கை பதிவு செய்ய உதவி உள்ளார், குறிப்பாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் 59*(33) ரன்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் கடைசி நிமிடத்தில் மழை குறுக்கிட்ட நிலையில் 19.2 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் லக்னோ அணி சார்பில் 125 ரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த அணியின் மிரட்டல் வீரர் மொயின் அலி 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 11 ரன்கள் மட்டுமே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மழை தொடர்ச்சியாக பெய்த நிலையில் போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டு போட்டி முடிவுக்கு கொண்டு வர பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.