பெங்களூரு அணியை துவம்சம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் .!! டெவோன் கான்வே மிரட்டல் ஆட்டம்..!! | csk stunning batting vs rcb 2023

ஐபிஎல் 2023 தொடரின் 24 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி பெங்களூர் அணியின் ஹோம் கிரௌன்டான சின்னச்சாமி மைதானத்தை அதிர வைத்தார்கள் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினர்கள்.பெங்களூர் அணியின் முன்னணி பவுலர் மொஹம்மது சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து சென்னை அணியின் இளம் அதிரடி வீரர் கெய்க்வாட் விக்கெட்டை பெற்றார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் டெவோன் கான்வே மற்றும் முன்னணி வீரர் அஜிங்கிய ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் பிளவில் ரன்கள் குவித்தார்கள். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இடம்பெற்ற அனுபவ வீரர் ரஹானே 37(20) ரன்கள் பதிவு செய்து ஹசரங்க இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்து மிரட்டலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த டெவோன் கான்வே பதிவு செய்து அசத்தினார், அவருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சிவம் துபே தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தார் என்று கூறினால் மிகையில்லை. சென்னை அணி சார்பில் அசத்தலாக விளையாடி வந்த டெவோன் கான்வே 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரி உட்பட 45 பந்துகளில் 83 ரன்கள் பதிவு செய்த நிலையில் சதம் பதிவு செய்ய முடியாமல் ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்
அடுத்ததாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சிவம் துபே 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி உட்பட 52 (27) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 226 ரன்கள் பதிவு செய்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.