சேப்பாக்கத்தில் நாங்க தான் கில்லி..!! சொல்லி அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ..!!

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னையில் சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வரும் போட்டியில், சென்னை அணி வீரர்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்னோ அணி பவுலர்களை நாளா பக்கமும் சிதறடித்து அசத்தினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே எல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் அரங்கை அதிர வைத்தார்கள், குறிப்பாக பவர் பிளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 79 ரன்கள் பதிவு செய்து அசத்தியது.
சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார், இந்நிலையில் வெறும் 8 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 101 ரன்கள் பதிவு செய்து சேப்பாக்கத்தில் ரன் மழை பொழிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி லக்னோ பவுலர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் மார்க் வுட் சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 (31) மற்றும் டெவன் கான்வே 47 (29) விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
அதன்பின் களமிறங்கிய சிவம் டுபே சில சிக்ஸர்கள் உடன் 27(16) ரன்கள் பதிவு செய்து வேகமாக பெவிலியன் திரும்பினார், அடுத்து களம் புகுந்த சென்னை வீரர்கள் அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார்கள்,குறிப்பாக இறுதியில் தல தோனி அடித்த 2 சிக்ஸர்கள் சேப்பாக்கத்தை அதிர வைத்ததோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் பதிவு செய்து மிரட்டியது.
சென்னை அணி போட்டியின் தொடக்கத்தில் ரன்கள் பெற்ற வேகத்திற்கு மிகப்பெரிய இலக்கை அடையும் என்று எதிர்பார்த்த நிலையில், லக்னோ பவுலர் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்கள் கைப்பற்றி சென்னை அணியின் ரன்கள் பதிவை சற்று கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.