குஜராத் பவுலர்களை சிதறடித்து சி.எஸ்.கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர் மழை பொழிந்தார் ..! | Csk ruturaj innings 2023

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் கோலாகலமாக தொடங்கியது, முதல் போட்டியிலே குஜராத் மற்றும் சென்னை அணிகள் அதிரடி ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் பவுலர்களை சிதறடித்து ரசிகர்ளுக்கு வாணவேடிக்கை காட்டினார். ஒரு பக்கம் சென்னை அணியின் வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் சரமாரியாக சிக்ஸர்கள் பதிவு செய்து சென்னை அணியின் ரன்களை ஏற்றினர்.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்ட ருதுராஜ் 23 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் அரங்கில் தனது வேகமான அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.அதன்பின் தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை தொடர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர் மழை பொழிந்தார்.
அதன்பின் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 9 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி உட்பட 92(50) ரன்கள் பதிவு செய்த போது குஜராத் பவுலர் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்து சதம் அடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது