மொயின் அலி சுழலில் சுருண்டது லக்னோ அணி..!! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே தரமான சம்பவம்..!!

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய 6 வது லீக் போட்டியில் ரன் மழை பொழிந்தது, குறிப்பாக சென்னை அணி தனது ஹோம் கிரவுண்ட் சேப்பாக்கத்தில் சில வருடங்கள் கழித்து களமிறங்குவதால் மிரட்டல் ஆட்டத்தை பேட்டிங் ,மற்றும் பவுலிங்கில் வெளிப்படுத்தி அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸர் மழை பொழிந்து சேப்பாக்கம் அரங்கை அதிர வைத்தது, குறிப்பாக அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். அதன்பின் வந்த அணியின் வீரர்களும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக அணியின் கேப்டன் தோனி சிக்ஸர்கள் அடித்து வான வேடிக்கை காட்டினார்.
இந்நிலையில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் பதிவு செய்தது, லக்னோ அணி இறுதியில் சென்னை அணியின் மிரட்டல் பேட்டிங்கை சற்று கட்டுப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் சென்னை அணி பவுலிங்கை துவம்சம் செய்து ரன்களை குவித்தார்கள், குறிப்பாக மிரட்டல் வீரர் கைல் மேயர்ஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதன்பின் சென்னை அணியின் நிலையை மாற்றும் வகையில் களத்தில் இறங்கிய ஸ்பின்னர்கள் மொயீன் அலி மற்றும் மிச்செல் சாண்ட்னர் விக்கெட்களை பெற்று ரன்கள் கட்டுப்படுத்தினார்கள், குறிப்பாக மொயீன் அலி கைல் மேயர்ஸ் 53(22), ராகுல் 20(18) , க்ருனால் பாண்டியா 9(9), மார்கஸ் ஸ்டோனிஸ் 21(18) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி லக்னோவின் அதிரடி ஆட்டத்திற்கு முடிவு கட்டினார்.
லக்னோ அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த நிக்கோலஸ் பூரான் 32 (18) விக்கெட்டை இம்பாக்ட் பிளேயர் துஷார் தேஷ்பாண்டே கைப்பற்றி சென்னை அணியை வெற்றியின் அருகில் அழைத்து சென்றார். அதன்பின் லக்னோ அணி இறுதிவரை முயன்றும் பலனளிக்காததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக விளங்கும் சேப்பாக்கத்தில் நாங்க தான் கில்லி என்று சொல்லி வெற்றியை பதிவு செய்து அசத்தினார்கள், ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் வெற்றியை பெற்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐபிஎல் அரங்கில் கே எல் ராகுல் தலைமையில் ஆனா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் தோல்வியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.