சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி பயணம் தொடருமா.?? பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா .?? | csk playing 11 vs srh 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ள போட்டியில், சென்னை அணி சார்பில் அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் நல்ல நிலையில் உள்ளது, குறிப்பாக தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த பார்மில் உள்ளது என்று கூறினால் மிகையில்லை.
அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி பேட்டிங் லைன் அப் இருந்தாலும் பவுலிங் யூனிட்டில் மிகவும் தடுமாறி தான் வருகிறது, அணியின் முன்னணி பவுலர்கள் தீபக் சாஹர், சிசண்டா மகலா ஆகியோர் காயத்தால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதால் இளம் பவுலர்களை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று தடுமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விலைக்கு வாங்கப்பட்ட தற்போதைய நிலையில் பென் ஸ்டோக்ஸ் காயத்தினால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸை தோனி களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவீதம் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று தான், குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் தனது வெற்றி பயணத்தை தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), மதீசா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே.