சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம் எஸ் தோனி விடுத்த முக்கிய எச்சரிக்கை..!! | ms dhoni warning in ipl 2023

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் மோதிய போட்டியில் சென்னை அணியின் பவுலர்கள் மிகவும் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அணி வீரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அணியின் ஹோம் கிரௌண்டில் சுமார் 3 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றது, குறிப்பாக சென்னை அணி முதலில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 217 ரன்கள் குவித்து அசத்தியது.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அதே சமயத்தில் சென்னை அணியின் பவுலர்கள் அதிகமாக வைட் பால் மற்றும் நோ பால் போட்டு எக்ஸ்ட்ரா ரன்கள் வழங்கி சொதப்பினார்கள், குறிப்பாக வேகபந்து பவுலர்கள் தீபக் சாகர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தேவை இல்லாத எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினார்கள். இந்நிலையில் சென்னை அணி அதிக ரன்களை பதிவு செய்தும் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் முடிவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அணியின் பவுலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார், அதாவது சென்னை அணியின் பவுலர்கள் எக்ஸ்ட்ரா ரன்கள் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும், இல்லை என்றால் புதிய கேப்டன் கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டும் இது எனது கடைசி எச்சரிக்கை என்று கூறினார்.
சிஎஸ்கே கேப்டன் பதிவை பார்த்த அணியின் ரசிகர்கள் கேப்டன் கூல் தோனி கோபப்படும் அளவுக்கு மோசமான ஆட்டத்தை தான் சென்னை பவுலர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதை ஒப்புக் கொண்டு, அணியின் பவுலர்கள் கண்டிப்பாக பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.