சென்னை அணிக்காக களமிறங்க உள்ள தோனி படைக்கவுள்ள முக்கிய மாபெரும் சாதனை..!! | IPL 2023 Dhoni New Milestone

ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க உள்ள கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய மைல்கல்லை அடைய உள்ளார். ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணிக்கு கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோனி பல சாதனைகள் மற்றும் வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், தற்போது முக்கிய சாதனை ஒன்றையும் படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியுள்ளது, அதற்கு முக்கிய காரணம் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்று கூறினால் மிகையில்லை. ஐபிஎல் அரங்கில் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன எம்.எஸ்.தோனி, இந்த 2023 ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் பதிவு செய்து புதிய மைல்கல்லை அடைய உள்ளார்.
ஐபிஎல் அரங்கில் எம்.எஸ்.தோனி 4978 ரன்கள் பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் 22 ரன்கள் பெற்றால் 5000 ரன்கள் பதிவு செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐபிஎல் அரங்கில் வெறும் 6 வீரர்கள் மட்டுமே 5000 ரன்கள் பதிவு செய்துள்ள நிலையில் 7 வது வீரராக தோனி இந்த சாதனை பட்டியலில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அரங்கில் 5000 ரன்கள் அல்லது அதற்கு மேல் பதிவு செய்துள்ள வீரர்கள் பட்டியலில்
1) விராட் கோலி - 6624
2) ஷிகர் தவான் - 6244
3) டேவிட் வார்னர் - 5811
4) ரோஹித் சர்மா - 5879
5) சுரேஷ் ரெய்னா - 5528
6) ஏ பி டி வில்லியர்ஸ் - 5162
இந்நிலையில் 41 வயதாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் அரங்கில் முக்கிய மைல்கல்லை விரைவில் அடைய உள்ளார். ஐபிஎல் 2023 ஆம் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கும் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.